TRAGAN Dragon Fruit ட்ராகன்

Be the First to Review
140180 ( 22.22% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

தென்னமெரிக்கவை இருப்பிடமாக கொண்ட இப்பழம் பிட்டாயா அல்லது டிராகன் பழம் என்று பொதுவாக அறியப்படுகிறது. காலம் செல்ல செல்ல இப்பழ சாகுபடி முறை, தென்கிழக்கு ஆசியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இப்பழத்தோல் டிராகன் எனும் விலங்கின் தோலமைப்பை ஒத்திருப்பதால், இதற்கு டிராகன் பழம் என்ற பெயர் வழங்கப்பட்டது. இப்பழம் மஞ்சள் அல்லது பச்சை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும்.

இப்பழம் சற்று அரிதாக கிடைக்கக்கூடிய ஒன்றாக உள்ளது; இது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் கிடைக்கலாம். மேலும் இப்பழம் ஆரோக்கியம், சருமம், கூந்தல் என பல வகை நன்மைகளை மனிதர்களுக்கு வழங்கக்கூடியது. இது கிவி மற்றும் பேரிக்காய் பழங்கள் போன்ற சுவை கொண்டது; இது மொறுமொறுப்பு தன்மை கொண்ட பழம் ஆகும். இப்பழத்தின் உட்புற சதை வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்; மேலும் இச்சதையில் சிறிய, கருப்பான உண்ணக்கூடிய விதைகள் காணப்படும்.