SWEET POTATO Sarkaraivalli SEENIKILANGU சீனி கிழங்கு (2KG)

Be the First to Review
128160 ( 20% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

கிழங்கு வகைகளில் மிகவும் அதேசமயம் அதிக சத்துக்கள் நிறைந்த ஒன்று என்றால் அது சர்க்கரை வள்ளி கிழங்குதான். இதனை நாம் அதிகம் பார்த்திருந்தாலும் சாப்பிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தியிருக்கமாட்டோம். நாம் எந்த உணவையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கிறோமோ அவையெல்லாம் பெரும்பாலும் ஆரோக்கியமானதாகவே இருக்கும் அதற்கு சிறந்த உதாரணம் சர்க்கரை வள்ளி கிழங்குதான்.எளிதில் கிடைக்கும், சுவையாக இருக்கும் என்பதையும் தாண்டி இதில் பல ஆரோக்கிய குணங்கள் உள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கு இதய பாதுகாப்பு, இரத்த சுத்திகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாத்தல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என பல நன்மைகளை வழங்குகிறது. சர்க்கரை வள்ளி கிழங்கு பற்றி நீங்கள் அறியாத ஆரோக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். அது மட்டுமின்றி இது எலும்பை வலிமைப்படுத்துதல், செரிமானம், இரத்தத்தை சுத்திகரிப்பது போன்ற பணிகளையும் செய்கிறது. அதுமட்டுமின்றி காயங்களை விரைவில் குணமாக்குவது சருமத்தின் நெகிழ்வு தன்மையை தக்கவைப்பது என பலவற்றிற்கும் வைட்டமின் சி அவசியம். அதுமட்டுமின்றி புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களையும் இது சரிசெய்யக்கூடும். சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி மற்ற பொருள்களை காட்டிலும் அதிகமாக உள்ளது.மெக்னீசியம் சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள மெக்னீசியம் மனஉளைச்சலை சரிபண்ண சிறந்த மருந்தாக இருக்கிறது. மருத்துவர்களின் அறிக்கை படி நான்கில் ஒருவருக்கு மெக்னீசிய குறைபாடு உள்ளது. இதனால் இரத்த சுழற்சியில் மாற்றம், இதை அடைப்பு, வலுவில்லாத எலும்புகள் என பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய சர்க்கரை வள்ளி கிழங்கு சரியான தேர்வாக இருக்கும்.