SENAI KILANGU சேனைக்கிழங்கு (1KG)

Be the First to Review
6890 ( 24.44% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது சேனைக்கிழங்கு. இவை ஸ்டார்ச் செறிந்தவை என்பதால், ஈரம் நிறைந்த உஷ்ணப்பிரதேசங்களில், இக் கிழங்குகள், பரவலாக பயிரிடப்படுகின்றன. சேனை கிழங்குகள் தான் ஆப்ரிக்கா ஆசிய தென்அமெரிக்கா மற்றும் கடல் தீவுப்பிரதேசங்களில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் முக்கியமான மாவுச்சத்து உணவு. இந்த கிழங்குகள் உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைப் போல பயன்படுத்தப் படுகின்றன. ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும் என்பதால் இதனை காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள். இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் 'யானைக்கால் கிழங்கு' என்றும் இதை வழங்குகிறார்கள்.மேற்கு ஆப்ரிக்காவிலும் நியூகிளியிலும் சேனைகிழங்குகள் முக்கியமான வேளாண்மை பொருட்கள். கி.மு. 8000 ஆண்டுகளில் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் முதன் முதலாக பயிரிடப்பட்டன. இன்று வரை இந்த பிரதேசங்களின் ஏழை, எளிய மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் இந்தக்கிழங்குள் இன்றியமையாதவை. குளிர்சாதன வசதியின்றி 6 மாதம் வரை இந்த கிழங்குகளை பாதுகாக்கலாம். எனவே மழைக்கால உணவு பஞ்சத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்படுகின்றனர். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இந்த கிழங்குகளில் டயாஸ்கோரின் ஒரு 'விஷ' காரம் உள்ளது. ஆனால் குறைந்த அளவில் இருக்கிறது. கிழங்குகளை வேக வைத்தால் இந்த விஷம் அழிந்து விடும்.டயாஸ்கோரின் தவிர, இந்த இன கிழங்குகளில் ஸ்டீராய்டுகளான சபோஜெனிங்களும் உள்ளன. டயாஸ்கோரியா இன கிழங்குகளில், விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி - 6, பொட்டாசியம், மங்கனீஸ் சத்துக்கள் உள்ளன. கொலஸ்ட்ரால், கொழுப்புகள் மற்றும் சோடியம் குறைவு. விட்டமின் சி, நார்ச்சத்து, விட்டமின் பி 6 - இவை ஆரோக்கியத்தை பாதுகாப்பவை. பெண்களின் சத்து மாத்திரை சேனைக்கிழங்கு உண்பதன் மூலம் எலும்பு அடர்த்தி குறைபாடும் ஆஸ்டியோ பெராசிஸ், இதய நோய்களும் தவிர்க்கப்படுகின்றன. பூரித கொழுப்பு குறைவாக இருப்பதும் நல்லதே. இதயம் பாதுகாக்கப்படும். உருளை ரகங்களை விட, சேனைக்கிழங்கு வகைகள் சர்க்கரை குறைந்தவை. குறைந்த கிளைசமிக் அளவுகள் உள்ளவை. நீடித்து இருக்கும் சக்தியை கொடுப்பது மட்டுமன்றி, நீரிழிவு, அதீத உடல் பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும். கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.