PUDALANKAI Snake Gourd புடலங்காய்

Be the First to Review
5880 ( 27.5% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

ஜுரம் என்பது பொதுவாக உடலின் சராசரியான வெப்பநிலையை அதிகரிக்க செய்து உடலை பலவீனமாக்கி செயல்பட முடியாமல் செய்து விடும் ஒரு நோயாகும். ஜுரங்களில் டைபாய்டு, வைரல் சுரம் மற்றும் மலேரியா நோயால் ஏற்படும் ஜுரத்தின் போது தினமும் சிறிதளவு புடலங்காயை பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட ஜுரம் நோய்களும் நீங்கும்.

மலச்சிக்கல் பலருக்கும் காலை நேரத்தில் மலச்சிக்கல் காரணமாக மலம் சரியாக கழிக்க முடியாமல் உடல் மற்றும் மனஅளவில் மிகுந்த அவஸ்தையை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனை தீர தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.

நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

மனிதர்களின் உடலில் இருக்கும் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. இப்படியான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் நாம் புடலங்காய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்கள் சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும்.