POTATO URULAIKILANGU உருளைக்கிழங்கு

Be the First to Review
78120 ( 35% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

உருளைக்கிழங்கு நன்மைகள்உலகில் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான். காய்கறிகளில் பலரும் விரும்பி சாப்பிடும் ஓன்று தான் உருளைக்கிழங்கு. சிலர் இந்த உருளைக்கிழங்கை பலவாறு சமைத்து சாப்பிட விரும்புவார்கள். மத்திய அமெரிக்கப் பழங்குடிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நூறுவகையான உருளைக் கிழங்கு வகைகளைப் பயிர்செய்து தினமும் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். சிலி நாட்டிலிருந்து ஈக்வடார் நாடு வரை ஆய்வுப்பயணம் செய்த ஸ்பானியர்களின் மூலமே உருளைக்கிழங்கு எல்லாக் கண்டங்களுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டில் பரவியது. அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம் சாப்பிடப்படுவது, உருளைக்கிழங்கு. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் இது இருக்கிறது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் இதைப்பார்க்கலாம்‘சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக்கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும், மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான்.அதே சமயம் பலருக்கும் இந்த உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவது நல்லதா அல்லது தோல் நீக்கி சாப்பிடுவது நல்லதா என்ற சந்தேகம் இருக்கும். மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வழைப்பழத்தில் உள்ளதைப்போன்ற அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு