POMEGRANATE Mathulai மாதுளை

Be the First to Review
120140 ( 14.29% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

மாதுளம் பழச்சாறு பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் ஒன்று மற்றும் இது அதிக மருத்துவ பண்புகளை கொண்டது என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்றே! இது இயற்கையிலேயே இனிப்புச்சுவை, அதிக ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஃபிளாவோனோட்களை கொண்டுள்ளது.

மாதுளை பழத்தின் அறிவியல் பெயர் புனிகா கிரனடம் எல். (புனிகாகேயி), இது இலையுதிர் புதர் வகையை சேர்ந்தது. இப்பழம் ஈரான் நாட்டில் தோன்றி, பல்வேறுபட்ட நாடுகளில் பயிரிடப்பட்டது (1). மாதுளை பழத்தின் தோல் சிவப்பாக இருந்தால், அது பழம் பழுத்துள்ளதை குறிக்கும்; மேலும் இப்பழத் தோலை யாரும் உண்பதில்லை. பழத்தின் உள்ளிருக்கும் மாதுளை பழ விதைகளை பயன்படுத்தி, மாதுளை பழச்சாறு தயாரிப்பர். பல்வேறு விதமான பிரச்சனைகளை சரி செய்ய, இந்த மாதுளை பழச்சாறு பயன்படுகிறது. இப்பதிப்பில் மாதுளம் பழம் மற்றும் மாதுளை பழச்சாறு அளிக்கும் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.