MORNING FRESH- சீரகம் (100G)

Be the First to Review
Description

1. ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து,கஷாயம் போல் சாப்பிட்டால் பேதி நிற்கும் .

2. இஞ்சி , சீரகம் ,சிறிது உப்பு சேர்த்து அரைத்து மோருடன் பருக வாயு தொல்லை நீங்கும் .

3. சீரகத்தை லேசாக வறுத்து கருப்பட்டி சேரத்து தொடர்ந்து உண்டு வர நரம்புகள் பலம் பெறும்.

4. சீரகத்துடன் மூன்று பல் பூண்டு சேர்த்து , மைபோல் அரைத்து எலுமிச்சை சாறில் கொடுக்க குடல் கோளாறுகள் குணமாகும்.

5. சீரகத்தை நீரில் ஊறவைத்து குடிப்பது சீரகநீர் . இந்த சீரக நீர் குடித்தால் வயிறு கோளாறு விலகும் . பசியின்மை கோளாறு விலகும் .

6. திராட்சை பழச்சாறுடன் சிறிது சீரகத்தை சேர்த்து மிக்சியில் அடித்து சாப்பிட ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும் .

7. மிளகு,சீரகம் இவற்றை பொடி செய்து , எண்ணெயிலிட்டு காய்ச்சி , அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் கண் எரிச்சல் , கண்ணில் நீர் வடிதல் குணமாகும் .

8. அகத்தி கீரையுடன் , சீரகம் , சின்ன வெங்காயம் சேர்த்து , கூட்டு வைத்து சாப்பிட ஆரம்ப நிலை மன நோய் குணமாகும் .மேலும் மன நோய் வராது .

9. சுக்கு , மிளகு , திப்பிலி , சீரகம் இவற்றை பொடி செய்து , தேனில் கலந்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் சீராக இயங்கும் . உடல் உறுப்புகள் வலிமை பெறும் .

10. சிறிது சீரகத்துடன், 2 வெற்றிலை , 4 மிளகு சேர்த்து மென்று தின்ன வயிற்று பொருமல் குணமாகும் .

11. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதலுக்கு , சிறிது சீரகத்துடன் ,சின்ன வெங்காயம் சேர்த்து மைபோல் அரைத்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் .

12. சீரகப் பொடியை தேயிலையுடன் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்க சீதபேதி குணமாகும் .

13. சீரகம் தாய் மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.

14.சீரக நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும் . உள்ளுறுப்புகள் சீராகும் .