BROCOLI/பிராக்கோலி (1KG)

Be the First to Review
Description

ப்ரோக்கோலி பயன்கள் புற்று நோய் தடுப்பு ப்ரோக்கோலி புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. மேலும் நடுத்தர வயது ஆண்களில் ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய்களைத் தடுப்பதில் ப்ரோக்கோலி சிறப்பாக செயல்படுகிறது. குடல், ஈரல் சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது. - Advertisement - கண்பார்வை அதிகம் நீர்த் தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்பாக கண்கள் இருக்கிறது. முதுமையை நெருங்கும் பெரும்பாலான மனிதர்கள் அனைவருக்குமே கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சி குறைகிறது. ப்ரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.இதயம் உலகில் இன்று பலரையும் வயது வேறுபாடின்றி தாக்கக்கூடிய நோயாக இதயம் சம்பந்தமான நோய்கள் இருக்கின்றன. இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கு பிரதான காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே காரணம் ஆகும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இந்த ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. நச்சு தன்மை இன்று நாம் சாப்பிடும் மற்றும் அருந்தும் உணவு பானங்கள் பல வகையான நச்சுக்கள் நிறைந்திருக்கின்றன. இவை உடலில் சிறிது சிறிதாக சேர்ந்து எதிர்காலங்களில் பல ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வழிவகை செய்கிறது. ப்ரோக்கோலியில் சல்பர் கூட்டுப் பொருட்கள் மற்றும் குளுக்கோஸிநோலேட்டுகள் ஆகிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவை நிறைந்திருக்கும் ப்ரோக்கோலியை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் நச்சுத்தன்மைகள் நீங்கி உடல் தூய்மை பெறும்.