Brinjal - Varikatri KATHIRIKAI VARI வரிகத்தரி (250GM)

Be the First to Review
1725 ( 32% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

சிறுநீரக கற்கள் தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கத்திரிக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் மூலம் அதிகம் காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.சுவாசக் கோளாறுகள் நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும். உடல் எடை குறைப்பு கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.இரும்பு சத்து குறைப்பு நமது உடல் பலம் பெற்றிருக்கவும், ரத்ததில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கும். புகை பழக்கம் புகை பிடிக்கும் பழக்கம் என்பது தன்னை மட்டும் அல்லது மற்றவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மோசமான பழக்கமாகும். தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு சிறிது காலத்தில் நுரையீரல், வாய் போன்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டாகிறது. கத்திரிக்காய் புகையிலையில் இருக்கும் நிக்கோடின் ரசாயனம் சிறிதளவு கொண்டிருக்கிறது. ஆனால் கத்திரிக்காயில் இருக்கும் இந்த நிக்கோடின் ரசாயனம் புகை பழக்கம் கொண்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவுகிறது.