BEETROOT OOTY ஊட்டி பீட்ரூட்

Be the First to Review
3050 ( 40% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

நம்மில் பலருக்கும் பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காது. ஏனெனில் அதில் உள்ள ஒருவகை இனிப்பு, சிலருக்கு பிடிக்காமல் போய் விடுகிறது. இதனாலே ஏராளமான நல்ல விஷயங்களை கொண்ட பீட்ரூட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். விலைகுறைவான அதேநேரம் உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசியத்தையும் தன்னுள் வைத்துள்ள பீட்ரூட் குறித்து, முழுமையான விளக்க பட்டியலை பார்ப்போம்.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. அதுமட்டுமின்றி, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. ஆய்வின்படி, ஒருவார கால அளவில் பீட்ரூட் சாறு எடுத்துக்கொள்ளும்போது, இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம்.(3) மற்றொரு அமெரிக்க ஆய்வானது, பீட்ரூட் சாறு உட்கொள்வது மாரடைப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக கூறியுள்ளது.(4) எலிகளை கொண்டு மேற்கொண்ட ஆய்வில், எலும்பு தசைகளுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குவதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிப்பதாக கண்டறியப்பட்டது (5). எலும்பு தசைகள் போதுமான ஆக்ஸிஜனைப் பெறாதபோது, ​​அவை பலவீனமடைந்து கை அல்லது கால்களை நகர்த்துவதற்கான திராணியை குறைக்கிறது. அன்றாடம் இந்த பீட்ரூட்டை ஜூஸ்அல்லது சாலட் போன்று ஏதோ ஒருவகையில் எடுத்துக்கொள்ளும்போது, இது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.