BANANA VALAI NADU நாட்டு வாழைபழம் (1KG)

Be the First to Review
Description

முக்கனிகளில் ஒன்றாக இருப்பது வாழைப்பழம் ஆகும்.பல்வேறு வகையான வாழைப்பழங்கள் கிடைக்கின்றன.அவற்றிலும் மருத்துவ குணங்கள் இருக்கிறது. அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய பழமாக உள்ளது.

வாழை பழத்தின் வகைகள் :

''வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது.

சத்துக்கள்

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும். இருப்பினும் தனித்தனியே ஒவ்வோர் வாழைப்பழத்தின் சிறப்பு அம்சத்தையும், பலன்களையும் பார்க்கலாம்.