BABY CORN பேபி கார்ன்

Be the First to Review
3545 ( 22.22% OFF)
Delivery
Enter pincode for exact delivery dates and charge
Safe and Secure payments.100% Authentic products
Description

பேபி கார்ன் மிக அதிகளவு வைட்டமின் பி சத்தை கொண்டது. ஃபோலிக் அமிலம், தயாமின், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் ஆகியவை நிறைந்தது. செரிமானம் சீராக இருக்க வைட்டமின் பி மிக முக்கியம். இதில் உள்ள ஃபோலேட், மூளையின் செயல்பாட்டுக்கு மிக முக்கியமானது. புதிய செல்கள், குறிப்பாக ரத்த செல்கள் உருவாகவும், நினைவாற்றல் மேம்படவும் உதவுபவை. சாதாரண கார்னை விட, பேபி கார்னில் கிளைசெமிக் இன்டக்ஸ் குறைவு. அதாவது, பேபி கார்ன் மூலம் உடலுக்குச் சேரும் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைவு.

* பேபி கார்னில் மெக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் அபரிமிதமாக உள்ளன. இந்தச் சத்துகள் எல்லாம் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுவதுடன், வயதாவதன் காரணமாக எலும்புகள் முறிந்து போவதையும் தவிர்க்கின்றன. சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கு உதவுகின்றன.

* நார்ச்சத்து நிறைந்தது என்பதால் மலச்சிக்கலை விரட்டுகிறது. கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கிறது. பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

* பேபி கார்னில் உள்ள கரோட்டினாயிட்ஸ், வைட்டமின் சி மற்றும் பயோ ஃப்ளேவனாயிட்ஸ் போன்றவை இதயத்தின் ஆரோக்கியம் காத்து, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கக்கூடியவை.

* இரும்புச்சத்துக் குறைபாட்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து அனீமியா எனப்படுகிற ரத்தசோகை ஏற்படுவதை பேபி கார்ன் தடுக்கிறது. காரணம், அதிலுள்ள வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் அமிலம்.

* இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ், சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படுகிற சிலவகைப் பிரச்னைகளுக்கு கார்ன் ஸ்டார்ச் மருந்தாகவும் பயன்படுகிறது.

* கர்ப்பிணிகள் பேபி கார்னை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். உயர் ரத்த அழுத்தம் இருந்தாலோ, கை, கால்களில் வீக்கம் அதிகமிருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு அதை எடுத்துக் கொள்வதே பாதுகாப்பானது. கர்ப்பிணிகளுக்கு ஃபோலிக் அமிலக் குறைபாடு இருந்தால், அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும். ேபபி கார்ன் சாப்பிடுவதன் மூலம் அதைத் தவிர்க்கலா